TVK Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tvk Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!

TVK Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!

Suguna Devi P HT Tamil
Jan 17, 2025 02:27 PM IST

TVK Vijay:நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து சாதனை படைத்தவர்களில் முதன்மையானவரும், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருபவர்களுக்கு முன்னோடியாக இருப்பவருமான எம்.ஜி.ஆருக்கு இன்று 108 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விஜய் எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்து வணக்கங்களை தெரிவித்துள்ளார்.

TVK Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
TVK Vijay: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர்! தமிழக அரசியலின் மையம்! எம்ஜிஆருக்கு வாழ்த்து சொன்ன விஜய்!

தவெக விஜய் 

தமிழ்நாடு அரசியலில் எம்ஜிஆருக்கு  பின் சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தள்ளனர். இதில் விஜயகாந்திற்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பு இருந்த போதிலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எம்ஜிஆர் அளவிற்கு அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த வண்ணம் இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை எனவும் தெரிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வந்த விஜய் தனியாக கட்சி தொடங்கினார். 

தற்போது நடித்து வரும் படத்திற்கு பின் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனவும் விஜய் அறிவித்துள்ளார். சமீபத்தில் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழக்கத்தின் மாநாடு தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. விஜயின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசியல் தலைவர்களாலும், விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டிற்கு அழைத்து நிவாரணம் வழங்கியதையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் விஜய் இனி வரும் தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளார் என்பது உண்மையே. 

எம்ஜிஆருக்கு வணக்கம்  

இன்று எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூத்தாடி என்ற கூற்றை சுக்கு நூறாக்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்த போது பலர் அவரை கூத்தாடி என விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் விஜயின் வாழ்த்து செய்தி கவனம் பெற்றுள்ளது. இது குறித்தான அவரது எக்ஸ் தளத்தில், 

"அளவற்ற வறுமையைத் தாண்டினார்.

கூத்தாடி என்ற கூற்றைச்

சுக்குநூறாக உடைத்து,

தமிழக அரசியல் வரலாற்றின்

மையம் ஆனார்.

அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.

அவரே தமிழக அரசியலின்

அதிசயம் ஆனார்.

இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்

பிறந்தநாள் வணக்கம்." எனக் குறிப்பிட்டுள்ளார். விஜயின் மாநாட்டிலும் அண்ணா, எம். ஜி. ஆர் போன்றவர்களின் கட்அவுட் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வாழத்திற்கு கீழ் அவரது ரசிகர்கள் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.