SVe Shekher vs Journalist: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sve Shekher Vs Journalist: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

SVe Shekher vs Journalist: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

Karthikeyan S HT Tamil
Published Apr 01, 2025 10:37 AM IST

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். அந்த சர்ச்சை கருத்து குறித்த விரிவான தகவல்கள் இதோ!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதி தோற்றத்தில் நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால், அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை. அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.

அத்துமீறி பேசும் வசனங்களால் சர்ச்சை

அவர் தன் மடியை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடித்தவர்கள்... இவ்வளவு இடம் இருக்கே... இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த அத்துமீறி பேசும் வசனங்கள் பெண் பத்திரிகையாளர்களே ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சித்தரிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து ஒரு பதிவை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார் எஸ்.வி.சேகர். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

15 ஆயிரம் ரூபாய் அபராதம்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பெண் பத்திரிகையாளர் குறித்து மீண்டும் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.