தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  'Achieving Sisters' Panrutti Cashew Farmer's Daughters Win Upsc Exam

UPSC Results 2023 : ‘சாதித்த சகோதரிகள்’–பண்ருட்டி முந்திரி விவசாயி மகள்கள் யுபிஎஸ்சி எழுதி அதிகாரிகள்-நெகிழ்ச்சி சம்பவம்

Priyadarshini R HT Tamil
May 24, 2023 09:48 AM IST

UPSC Results 2023 : பண்ருட்டி விவசாயியின் மகள்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2020ம் ஆண்டு இவரது சகோதரி ஐஸ்வர்யாவும் யுபிஎஸ்சி தேர்வில தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (தூதரக அதிகாரி), ஐஎஃப்ஓஎஸ் (வனத்துறை அதிகாரி), இந்திய போஸ்டர் அதிகாரி, ரயில்வே அதிகாரிகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய அளவிலான தரவரிசையில் சென்னை மாணவி ஜீஜீ, சென்னை பெரும்பூரை சேர்ந்த அவர் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 107வது இடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் சரவணன் என்பவர்147 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.

அருண் என்பவர் 426 இடத்தையும், சென்னையை சேர்ந்த மதிவதனி ராவணன் என்ற பெண் 447வது இடத்தை பிடித்து தேர்வில் தேர்ச்சியடைந்து இருக்கிறார்கள். கார்த்திக் என்பவர் 488வது இடத்தையும், பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

சுஷ்மிதாவின் சகோதரி ஐஸ்வர்யாவும் கடந்த 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார். ஒரே குடும்பத்தில் அக்கா, தங்கை என இருவரும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பண்ருட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகோதரிகளின் சாதனைகளை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்