தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Accident Woman Dies After Being Hit By Heavy Vehicle Going To Kerala

Accident: கேரளாவிற்கு சென்ற கனரக வாகனம் மோதி உடல் சிதறி பெண் பலி

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 13, 2024 09:41 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி வந்த கனரக லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உடல் சிதறி பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Road Accident
Road Accident

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த கனரக வாகனங்களால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கனிமவளம் ஏற்றி ஏற்றி வரும் கனரக லாரிகள் மோதி 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஒரு வருடத்தில் மார்த்தாண்டம் சுற்றுபகுதியில் மட்டுமே கனரக லாரிகள் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் செங்கோடு அருகே கொற்றவிளை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஞானதாஸ் என்பவர் தனது மனைவி பீனா (52) உடன் இருசக்கர வாகனத்தில் திருவனந்தபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை பகுதியில் பாலம் முடியும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த கனரக லாரி மோதியதில் பீனா சம்பவ இடத்திலேயை உடல் சிதறி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் உயிரிழந்த பீனாவின் உடலை கைபற்றி டார்பாயில் மூட்டை கட்டி உடற்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் பூதபாண்டியை சேர்ந்த சகாய பால்சன் என்பவரை தேடி வருகின்றனர். 

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி சென்ற லாரி மோதி பெண் உடல்சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அதிவேகமாக செல்லும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்