DMK MLA Son Arrest: பணிப்பெண் வன்கொடுமை வழக்கு.. தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Mla Son Arrest: பணிப்பெண் வன்கொடுமை வழக்கு.. தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

DMK MLA Son Arrest: பணிப்பெண் வன்கொடுமை வழக்கு.. தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

Divya Sekar HT Tamil
Jan 25, 2024 05:51 PM IST

பணிப்பெண் மீது வன்கொடுமை நடத்திய திமுக எம். எல்.ஏ.கருணாநிதியின் மருமகள் மெர்லினா மற்றும் மகன் ஆன்டோ மதிவாணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது
தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா. இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில்  18 வயது இளம்பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவி 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என முடிவு செய்து உயர் படிப்பிற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

பல மாதங்களாக இளம்பெண் வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளனர். மேலும். இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி, ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எம்.எல்.ஏ.வின் மருமகள் மெர்லினா அடித்து துன்புறுத்தியதில் ரேகாவின் தலை,முகம்,கை,கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மேலும், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பலம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மொலினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், புகார் தொடர்பாக போலீசார் நடத்தி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ மகள் ஆண்டரோ மற்றும் மருமகள் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு முன் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்,இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை அழைத்து வரப்படும் இருவரிடமும் விசாரணை நடத்தி பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆந்திரா அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.