தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin: ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Aavin: ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Marimuthu M HT Tamil
Nov 20, 2023 05:03 PM IST

ஆவினில் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவினில் டிலைட் பாலால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் நாளுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.