Aadi Perukku: களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் - காலை முதலே நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை, கொள்ளிடம் ஆறு கரைகள், ஈரோடு பவானி கூடுதுறை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதலே பொதுமக்கள் கூடி புனித நீராடி, படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

தமிழ் மாதங்களில் ஆடி சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இதையடுத்து ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வதற்காக காவிரி, கொள்ளிடம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், நீர்நிலை பகுதிகளில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூடி படையலிட்டு வருகின்றனர்.