Tasmac Shops : சென்னை டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை.. எந்தெந்த நாட்கள் தெரியுமா?
சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜனவரி 16, 25, 26 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள், கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் ஜனவரி 16, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன .26 ஆகிய 3 தினங்களும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 3 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அந்த மூன்று நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்