Memorial Day Of Child Poet Azha Valliappa: இனிக்கும் பாடல்களைத் தந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவுநாள்!
Memorial Day Of Child Poet Azha Valliappa: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நினைவுநாள் குறித்த சிறப்புக் கட்டுரை..

Memorial Day Of Child Poet Azha Valliappa: தமிழில் எண்ணற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் பரீட்சயம் ஆகி இருந்தாலும் படிக்கும் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர், அழ. வள்ளியப்பா. ஏராளமான பாடல்கள்களை குழந்தைகளுக்காக எழுதி, இளம்பிள்ளைகளின் நாவில் உச்சரிக்கப்படும் பாட்டுக்குச் சொந்தக்காரன் ஆனவர். இவர் குழந்தைகளுக்காக ஏறத்தாழ 2ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ராயவரம் என்னும் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு, அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது ஐந்து வயதில் அழகப்பன் என்னும் உறவினர் வீட்டுக்குத் தத்துப் பிள்ளையாகச் சென்றார். அன்று முதல் அழ. வள்ளியப்பன் ஆனார். ராயவரம் -சு.க.தி. காந்தி ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும், ராமச்சந்திரபுரத்தில் பூமீஸ்வரஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியிலும் அடிப்படைக் கல்வியைப் படித்தார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, பதின்மூன்று வயதில் இருந்து கவிதை எழுதத்தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத காரணத்தினால், 1940ஆம் ஆண்டில், சென்னையில் வை. கோவிந்தன் அவர்கள் நடத்திய ‘சக்தி’ என்னும் பத்திரிகையில் காசாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, அந்த இதழின் ஆசிரியராக இருந்த ரங்கராஜன் வள்ளியப்பாவை உற்சாகமும் ஊக்கமும் படுத்தினார்.
இதனால், தனது முதல் கதையை சக்தி இதழில் எழுதி பிரசுரித்தார், அழ. வள்ளியப்பன். முதல் கதையின் பெயர் தெரியுமா, ‘ஆளுக்குப் பாதி’.
அப்போது அங்கு உடன் பணியாற்றிய, தன் சொந்த ஊரைச் சேர்ந்த வள்ளியம்மை என்ற பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டது. பின், இவர்களது திருமணம் 04.02.1942ஆம் ஆண்டு மணந்தார்.
முன்னதாக, 1941-ல் சக்தி என்னும் இதழில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார். அதன் 1982ஆம் ஆண்டு வங்கியில் இருந்து ஓய்வு பெறுவது வரை விடாமல் எழுதிக்கொண்டு இருந்தார். அவர் பெரும்பாலும் எழுதியது, குழந்தைகளுக்காகத்தான். தனது பெயரைக் கூட குழந்தைகள் எழுதில் படிப்பதற்கு வசதியாக, அழ. வள்ளியப்பா என மாற்றிக் கொண்டார்.
குழந்தை எழுத்தாளர் அழ. வள்ளியப்பா எழுதிய நூல்கள்:
எழுத்தாளர் அழ. வள்ளியப்பா எழுதிய இனிக்கும் பாடல்கள், ஈசாப் கதைப் பாடல்கள், குழந்தைக் குரல், சிட்டுக்குருவி, சின்னஞ்சிறு பாடல்கள், நேரு தந்த பொம்மை, பாப்பாவுக்குப் பாட்டு, பாட்டுப் பாடுவோம், பாடிப் பணிவோம், பாலர் பாடல் ஆகியப் பாடல் நூல்களை எழுதினார். மேலும், உமாவின் பூனைக்குட்டி, கதை சொன்னவர் கதை என்னும் வரலாற்று நூலையும், குதிரைச் சவாரி என்னும் நெடுங்கதையையும் சோனாவின் பயணம், திரும்பி வந்த மான் குட்டி, நல்ல நண்பர்கள், நீலா மாலா, பர்மா ரமணி என்னும் கதையையும், ரோஜாச்செடி என்னும் கதையையும், வித்தைப் பாம்பு, மணிக்கு மணி, வாழ்க்கை விநோதம், மிருகங்களுடன் மணி, மூன்று பரிசுகள், வெளிநாட்டு விடுகதைகள், வேட்டை நாய் ஆகிய கதைகளையும் எழுதினார்.
பெற்ற சிறப்புப் பட்டங்கள்:
கல்கண்டு இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன், பேச்சிலும் எழுத்திலும் அழ.வள்ளியப்பாவை ‘குழந்தைக் கவிஞர்’என்றே குறிப்பிட்டார். அது அவ்வாறே பலராலும் அழைக்கப்பட்டது. அதனைப் பலரும் அப்படியே பின்பற்றத் தொடங்கினர். பாரதி இளைஞர் சங்கத்தின் விழாவில் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், ‘பிள்ளைக் கவியரசு’ என்ற பட்டத்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவுக்குக் கொடுத்தார். அதன்பின், காரைக்குடியில் நடந்த சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாவில் கவிஞர் முடியரசன், இவருக்கு ‘மழலைக் கவிச் செம்மல்’ என பட்டம் சூட்டப்பட்டார். அதேபோல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் அன்றைய அமைச்சர் அரங்கநாயகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் விருதினை வழங்கி கவுரவித்தார்.
இத்தகைய சிறப்புப் பெற்ற அழ.வள்ளியப்பா,1989ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் தேதி தனது 16 வயதில் மரணமடைந்தார். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது படைப்புகள் குழந்தைகளுக்கு இன்றும் நிலைத்து நின்று அறநெறி ஊட்டுபவை.

டாபிக்ஸ்