‘கருப்பு சிவப்பு நரிகள்.. இது தான் பாஜகவின் பழக்கம்’ கோவை முழுவதும் பரபரப்பு போஸ்டர்!
அதிமுக, திமுக என மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், தற்போது பாஜகவும் கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
பாஜக சார்பில் ‘பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே பாஜக - கோவை முழுவதும் பாஜக போஸ்டர் ’ என்கிற போஸ்டர், கோயம்புத்தூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது நிலையில் இதன் இடையே அ.தி.மு.க வினர் 'யார் அந்த சார்?' என போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.
போஸ்டர் போரில் குதித்த பாஜக
அதே போல இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுகவினர், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது,#savegirls education என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதிமுக, திமுக என மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், தற்போது பாஜகவும் கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
அதில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம்.கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முழக்கம் ! என்று திமுக, மற்றும் அதிமுகவை விமர்சித்து ஒட்டி இருக்கும் போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எடப்பாடி மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
இதற்கிடையில், அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி.
திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை பெண்களிடம் உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார் எனத் தோன்றுகிறது,’
அந்த அறிக்கையில் ரகுபதி கூறியிருந்தார்.
டாபிக்ஸ்