சோகம்.. ’வீட்டில் பிரியாணி சாப்பிடக்கூடாது’ பிரியாணியால் அண்ணன்-தம்பி சண்டை.. கடைசியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சோகம்.. ’வீட்டில் பிரியாணி சாப்பிடக்கூடாது’ பிரியாணியால் அண்ணன்-தம்பி சண்டை.. கடைசியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!

சோகம்.. ’வீட்டில் பிரியாணி சாப்பிடக்கூடாது’ பிரியாணியால் அண்ணன்-தம்பி சண்டை.. கடைசியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil
Jun 19, 2024 10:56 AM IST

Chennai : வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

 ’வீட்டில் பிரியாணி சாப்பிடக்கூடாது’ பிரியாணியால் அண்ணன்-தம்பி சண்டை.. கடைசியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!
’வீட்டில் பிரியாணி சாப்பிடக்கூடாது’ பிரியாணியால் அண்ணன்-தம்பி சண்டை.. கடைசியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை தாம்பரம் ரங்கநாதபுரம் 6ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு. குவைத்தில் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு 16-வயதில் தாரிஸ் மற்றும் 14, வயதில் கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்

தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார். இதனால் வீட்டில் அசைவ உணவு செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17,ஆம் தேதி பக்ரீத் பண்டிகையின் போது தாரிசின் தம்பி கோகுல் அருகில் நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். இதில் அண்ணன் தம்பியிடேயே தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிடக்கூடாது என சண்டையிட்டு வாக்குவாதம் செய்து உள்ளார் தாரிஸ். பின்னர் வீட்டில் தனி அறையில் வெளியில் வராமல் தாரிஸ் இருந்துள்ளார்.

வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் உள்ளே பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. 

தாம்பரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை 

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் மாணவன் தாரிசின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.