AIADMK Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’

AIADMK Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 11, 2025 12:33 PM IST

அதிமுக மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் `பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என அநாகரிகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும் கண்டனம்.

AIADMK Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’
AIADMK Protest : ‘சென்னையில் குவிந்த அதிமுக மகளிரணி.. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைக்கும் விதமாகவும்,

அதிமுக முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

அதிமுக மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் `பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக’ என அநாகரிகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கரனைக் கண்டித்தும், ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரின் ஆபாச வீடியோவைக் காட்டி, மிரட்டி பணம் கேட்ட சம்பவத்தில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் மீது, வழக்கு பதிவு செய்யாமல் பாதுகாக்கும் விடியா திமுக அரசின் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அறிவிப்பிற்கிணங்க, அதிமுக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பங்கேற்றவர்கள் யார்?

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் செயலாளர்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.