நடுரோட்டில் ஜெயிலருக்கு ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி.. மதுரையில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நடுரோட்டில் ஜெயிலருக்கு ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி.. மதுரையில் நடந்தது என்ன?

நடுரோட்டில் ஜெயிலருக்கு ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி.. மதுரையில் நடந்தது என்ன?

HT Tamil HT Tamil
Dec 21, 2024 09:47 PM IST

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி மற்றும் தாக்கிய மாணவியின் சித்தியான இளம்பெண் மற்றும் மாணவி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

நடுரோட்டில் ஜெயிலருக்கு ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி.. மதுரையில் நடந்தது என்ன?
நடுரோட்டில் ஜெயிலருக்கு ‘டைகர் ஹா ஹூக்கும்’ ஸ்டைலில் அடி.. மதுரையில் நடந்தது என்ன?

மதுரை உதவி ஜெயிலர் மீதான் குற்றச்சாட்டு

மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து வந்த முன்னால் சிறைவாசி ஒருவர் பைபாஸ் சாலைப் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வந்துள்ளார்.

அந்த கடையில், சிறைவாசியின் மகள்கள் அவ்வப்போது அங்கு வந்த நிலையில், அவ்வப்போது உதவி ஜெயிலர் பாலகுருசாமி அங்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி அங்கு இருந்த சிறைவாசியின் மகள் ஒருவரிடம் பேசிவந்துள்ளார்.

இதற்கிடையில், சிறைவாசியின் மகளின் மகளான பேத்தியும், அந்த கடைக்கு வந்து சென்றுள்ளார். அவர் ஒரு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தன் சித்தியுடன், சம்மந்தப்பட்ட பள்ளி மாணவி,  கடையில் இருந்தபோது, தனது செல்போன் என்னைக் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள் என அந்த சிறுமியிடம் பாலகுருசாமி கூறியதாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் நடந்த தாக்குதல்

இதனையடுத்து மாணவியிடம் அவ்வப்போது செல்போனில் பாலகுருசாமி பேசிவந்ததாகவும், கூறப்படுகிறது. தொடர்ந்து பாலகுருசாமி, சம்மந்தப்பட்ட சிறுமியை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லவதாக சந்தேகப்பட்ட சிறுமியின் சித்தி, அவரை கண்காணித்துள்ளார்.  இதனிடையே இன்று காலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது, சம்மந்தப்பட்ட மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பள்ளி மாணவியின் சித்தி அங்கு வர, தன் அக்கா மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியிலே வைத்து அடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உதவி ஜெயிலர் பாலகுருசாமி மற்றும் தாக்கிய மாணவியின் சித்தியான இளம்பெண் மற்றும் மாணவி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

வீடியோ வெளியான நிலையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட பின்பாக வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுரோட்டில் வைத்து உதவி ஜெயிலர் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.