தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Mechanic Came To Coimbatore From Dubai Due To Minister Udayanidhi's Initiative - This Is The Reason!

அமைச்சர் உதயநிதி முயற்சியால் துபாயிலிருந்து கோவை வந்த மெக்கானிக்-காரணம் இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 19, 2023 03:28 PM IST

Coimbatore: இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்
பாதிக்கப்பட்ட நபர்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனியைச் சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் ஜான் வயது 43. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்று அங்கே ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்பட்டார். பின் துபாய் நாட்டில் என் எம் சி ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெறுவதாக விரும்பினார்.

இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சார்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும்படி சுபி கிருஷ்ணன் கேட்டார் அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொது துறை மற்றும் சுகாதாரத் துறை துபாய் நாட்டில் இருந்து விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய் தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சிபி கிருஷ்ணன் மருத்துவமனை முதல்வரை சந்தித்து தமிழக அரசுக்கும் அரசு மருத்துவமனைக்கும் நன்றி தெரிவித்ததோடு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரையும் வேண்டுகோள் விடுத்தார்.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது ஒரு குழந்தை பத்தாம் வகுப்பு படிக்க உள்ளார். மற்றொரு குழந்தை சிறப்பு குழந்தை . இவர் தற்போது சிறப்பு பள்ளியில் படித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மெக்கானிக்கை கோவை அழைத்துவர நடவடிக்கை எடுத்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்