தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Holiday Has Been Announced For Tasmac Shops Today On The Occasion Of Vallalar Memorial Day

Tasmac Closed: டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை-உங்க ஊர் இருக்கா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Feb 05, 2023 06:57 AM IST

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை
டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

ட்ரெண்டிங் செய்திகள்

இதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மது விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் இன்று மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 'வள்ளலார் நினைவு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் இன்று மூடப்பட்டிருக்கும். 

அன்றைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆம் தேதி மதுபான சில்லரை விற்பனையும் நடைபெறாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி இன்று (பிப்ரவரி.5) இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாநகராட்சி ஆணையர்‌ சிவகுமார் தெரிவித்துள்ளார். வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று ஆடுவதை செய்யும் கூடத்தில் ஆடுவதை செய்ய அனுமதியில்லை எனவும், அனைத்து ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் இன்று மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்