‘கவிழ்ந்த 18 டன் கேஸ் டாங்கர்.. கட்டுப்பாட்டில் கோவை.. விரையும் NDRF குழு’ அதிகாலையில் பரபரப்பு!
NDRF குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோவை மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்தாகி, டேங்கர் கழன்று விழுந்ததால், கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது பற்றி கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘காலை 3.15 மணியளவில் கொச்சியில் இருந்து வந்த Lpg கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கேஸ் கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி ஐஓசிஎல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக பம்பு மூலம் கேஸ் அகற்றுவதற்கான பணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
டேங்கில் நிரப்ப முயற்சி நடக்கிறது
NDRF குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டு, மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேறு பம்பை வைத்து இரண்டு மூன்று டேங்கில் நிரப்ப முயற்சிக்கிறோம். தற்காலிகமாக வாயு கசிவை நிறுத்தி இருக்கிறோம்.
லாரியில் 18 டன் எல்பிஜி கேஸ் இந்த டேங்கர் லாரியில் உள்ளது. தற்காலிகமாக வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள LPG குடோனுக்கு கொண்டு செல்லப்படும்,’’ என்று கோவை ஆணையர் பேட்டியளித்தார்.
டாபிக்ஸ்