தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Gang Attacked Madurai City Deputy Mayor's Residence And Office

Madurai: துணை மேயா் வீடு, ஆபிஸ் மீது கொடூரத் தாக்குதல்.. மதுரையில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil
Jan 09, 2024 11:18 PM IST

Madurai Deputy Mayor: மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தநிலையில், இன்று மாலை சுமார் 7 மணிக்கு வீட்டில் அவரும், அவரது மனைவியும் இருந்தனர். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். கதவை திறக்காததால் அந்தக்கும்பல் முன்பக்கம் இருந்த இரும்பு கேட்டை ஆயுதங்களால் சேதப்படுத்திவிட்டு, வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் உள்ளிட்ட இரு டூவீலர்களை அடித்து சேதப்படுத்தி உள்ளது.

பின்னா், எதிரிலுள்ள அவரது அலுவலக கதவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து துணை மேயா் நாகராஜன் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் துணை மேயர் வீடு முன்பு திரண்டனர்.

இச்சம்பவத்தை கண்டித்து ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸார் அவர்களிடம் சமரசம் பேசினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் உறுதியளித்தைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனர்.

இதனைத் தொடா்ந்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை பிடித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்