தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A Deep Depression Over The Bay Of Bengal Has Turned Into A Storm

Cyclone Michaung : வங்கக்கடலில் உருவானது ‘மிக்ஜாம்' புயல்.. 5 ஆம் தேதி கரையை கடக்கும்!

Divya Sekar HT Tamil
Dec 03, 2023 08:59 AM IST

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

வங்கக்கடலில் உருவானது ‘மிக்ஜாம்' புயல்
வங்கக்கடலில் உருவானது ‘மிக்ஜாம்' புயல் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக, டிசம்பர் 4ஆம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தற்போது  வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு ‘மிக்ஜாம்' புயல் என பெயர் வைக்கப்படுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும்; இந்த புயலானது நெல்லூர்-மசூலிபட்டினம் இடையே டிச.5ஆம் தேதி மாலை கரையை கடக்கும். சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவாகும் நான்காவது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்