Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?

Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 23, 2024 09:23 AM IST

இதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் ஹரீஷின் நண்பரான பீகாரை சேர்ந்த குந்தன்ராஜவை கள்ளதுப்பாக்கி வாங்க இருவரும் அணுகியுள்ளார். அதன் படி, குந்தன்ராஜாவும், ஹரிஷ் ஸ்ரீயும், ரயிலில் பீகார் சென்று, குந்தன்ராஜா கூறிய இடத்தில் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.

Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?
Coimbatore: ‘கோவையில் பீகார் துப்பாக்கி.. ஐடி ஊழியர் உட்பட மூன்று பேர் கைது’ பின்னணி நடந்தது என்ன?

கோயம்புத்தூர் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு . ஐடி ஊழியரான இவர் டைடல் பார்க்கில் பணியாற்றி வருகின்றார். இவரை அழைத்து செல்ல வரும் வாகனத்தின் ஓட்டுனரான ஹரிஷ் ஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். தினமும் வாகனத்தில் பயணிக்கும் போது, மணிகண்ட பிரபுவும், ஹரிஷ் ஸ்ரீ ஆகிய இருவரும் நண்பர்களாகினர் . இந்நிலையில் பீகாரில் குறைந்த விலையில் நாட்டு துப்பாக்கி கிடைக்கும் என்று மணிகண்ட பிரபுவிடம், ஹரிஷ் தெரிவித்துள்ளார். அதற்கு ஆசைப்பட்ட மணிகண்ட பிரபு, தனக்கு ஒரு துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும்படி ஹரிஷிடம் கேட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் ஹரீஷின் நண்பரான பீகாரை சேர்ந்த குந்தன்ராஜவை கள்ளதுப்பாக்கி வாங்க இருவரும் அணுகியுள்ளார். அதன் படி, குந்தன்ராஜாவும், ஹரிஷ் ஸ்ரீயும்,  ரயிலில் பீகார் சென்று, குந்தன்ராஜா கூறிய இடத்தில் துப்பாக்கி வாங்கியுள்ளனர்.

இந்த கள்ள துப்பாக்கி பரிமாற்றம் குறித்த ரகசிய தகவல் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்துய, சம்மந்தப்பட்டவர்களை நெருங்கி துப்பாக்கியை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மணிகண்ட பிரபு, ஹரிஷ் ஸ்ரீ, குந்தன்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், மூன்று பேர் மீதும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பீளமேடு போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் பீகார் துப்பாக்கி வந்த விவகாரம், நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.