2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய ஒரு ஊழல் வெளிப்படும்-சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
சுமார் 45 நிமிடங்கள் ஆளுநரை சந்தித்து முறையிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆளூநர் மாளிகை நுழைவு வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜியின் அப்பன், முப்பாட்டன் செந்தில் பாலாஜிக்கு எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா? என அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சபரீசன் ஏன் வந்து பார்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் டம்மி அமைச்சர்களாக உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அடித்த கொள்ளையை விசாரித்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய ஒரு ஊழல் வெளிப்படும் என்றார் சி.வி.சண்முகம்.
தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரன சூழல் மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் ஆளுநரை சந்தித்து முறையிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆளூநர் மாளிகை நுழைவு வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், "நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாகியும் அமைச்சராக தொடர்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரண்பாடானது.
ஒரு வேலைக்கு பத்து பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்காமல் காத்துக் கொண்டுள்ளார். இது முற்றிலும் தவறான செயல்.
குற்றவாளியாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள அமைச்சருக்கு முதலமைச்சர் ஏன் இந்த அளவிற்கு இறங்கி வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட வருந்தியோ, ஒரு முறை கூட சென்று பார்த்ததாக எனக்கு தெரியவில்லை.
எங்கள் ஆட்சியில் நடைபெற்ற போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிய முதலமைச்சர் ஏன் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை?
மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு 03:30 மணிக்கு அமைச்சர் உதயநிதி வந்து பார்க்கிறார். முதலமைச்சர் வந்து பார்க்கிறார். சபரீசன் ஏன் வந்து பார்க்க வேண்டும்?
மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் ஓடோடி வந்து பார்ப்பது இந்த குற்றச்சாட்டை உண்மையாக்குவது போல உள்ளது.
முதலமைச்சர் கூட இந்த அளவிற்கு வருமானம் பார்க்கவில்லை.
மின்சாரம், கலால் துறையை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதித்துள்ளார்.
சென்னையில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி வருமானம் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மோசடி செய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தில் ரூ. 4000 கோடி மோசடி செய்து உள்ளார்.
செந்தில் பாலாஜி மீது மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக முதலமைச்சர் கூறுவதற்கு அறுகதை உள்ளதா? கூட்டணி கட்சித் தலைவர்கள் கூக்குரல் இடுவதற்கு அருகதை உள்ளதா?
இன்றைக்கு கூச்சலிடும் இந்த தலைவர்கள் அன்று கரூரில் தாக்கப்பட்ட அதிகாரிக்கு குரல் கொடுக்காதது ஏன்?
இரண்டு ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அடித்த கொள்ளையை விசாரித்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய ஒரு ஊழல் வெளிப்படும்.
அப்படி நடைபெற்றால் முதலமைச்சரின் குடும்பம் சிக்கும் என்ற காரணத்தினால் ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசாங்கமும் ஒரு குற்றவாளிக்கு துணை போய், வாதாடி கொண்டிருக்கிறது.
அவர் மட்டும் இன்றி அவரது கூட்டணி கட்சியினரும் துதி பாடி கொண்டிருக்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்டி பார்க்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தை குறிப்பிடுகிறாரா?
கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜியின் அப்பன், முப்பாட்டன் செந்தில் பாலாஜிக்கு எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா?
அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தல் உட்பட 2 தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கொங்கு மண்டல தளபதியா? என்றார் சி.வி.சண்முகம்.
டாபிக்ஸ்