தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  9,000 Crore Metro Rail Project In Coimbatore

TN Budget 2023 : கோவையில் ரூ.9,000கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் !

Divya Sekar HT Tamil
Mar 20, 2023 12:58 PM IST

TN Budget 2023: கோவை மெட்ரோ ரயில் திட்டம் 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மெட்ரோ ரயில் திட்டம் நலன் குறித்த அறிவிப்புகளை பிடிஆர் வெளியிட்டார். அதில், மெட்ரோ இரயில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 63,246 கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்டப்பணிகள் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம் இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் மருத்துவ வசதிகள், உற்பத்தித்துறை என பல்தொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும். 

கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு அரசு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, 708 சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தூங்காநகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில்

அமைக்கப்படும். மெட்ரோ ஒத்தக்கடையையும் இணைக்கும். இரயில் திருமங்கலத்தையும் இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்”என அறிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்