Rain Alert : புயல் எதிரொலி.. 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். மேலும் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் இதனால் டிசம்பர் 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். இதனால் நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளனர் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளர்.
முன்னதாக வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இன்று புயலாக வலுப்பெற்று நாளை காலை தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழக - புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.