தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  7-years-old Boy Found Death In Vembar Near Vilathikulam

Crime: வீட்டிலிருந்த சிறுவன்.. கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

Karthikeyan S HT Tamil
Jan 11, 2024 08:38 AM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 7 வயது சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

க்ரைம் (கோப்புபடம்)
க்ரைம் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பா்ா கடற்கரை கிராமத்தை சோ்ந்தவா் முத்துக்குமாா். மீன்பிடித் தொழிலாளி. இவரின் மகன் அஸ்வின் குமாா் (7). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். காய்ச்சல் காரணமாக அஸ்வின் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளதாக தொிகிறது.

இந்தநிலையில், அஸ்வின் குமார் நேற்று (டிச.10) வேம்பார் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது வீட்டின் முன்பு புறம் விழுந்து கிடப்பதை கண்ட அப்பகுதியினா், அவனை தூக்கினா். அப்போது கழுத்தில் கத்திக்குத்து போன்ற காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனா். இதையடுத்து சூரங்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற சூரங்குடி போலீசாா் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து அங்கு வந்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், ஆய்வாளா் வெங்கடேச பெருமாள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினா். மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா்.

இறந்த சிறுவனின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்த காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விளையாட்டில் விபரீத சம்பவம் ஏதேனும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா். காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்த சிறுவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்