DMK VS NTK: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Ntk: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!

DMK VS NTK: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!

Kathiravan V HT Tamil
Published Jan 24, 2025 11:27 AM IST

வயது, சுயமரியாதை, தன்மானத்தை இழந்து ஒரு இயக்கத்தில் பயணித்தோம். ஒரு சில வருடங்களாக நாம் பயணித்த திசை தடுமாறி இந்துத்துவத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. தரமற்ற தகுதியற்ற தலைமையிடம் சொல்லும் போது, அங்கு நமது சுயமரியாதை கெடுகிறது என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேதனை

DMK VS NTK: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!
DMK VS NTK: காலியாகிறதா நாம் தமிழர் கட்சி! ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்!

3000 பேர் திமுகவில் இணைந்தனர்

ஒரு மண்டல செயலாளர், 8 மாவட்ட செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 தொகுதி செயலாளர்கள், 3 முன்னாள் எம் பி வேட்பாளர்கள், 6 முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் உட்பட 3000 பேர் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் இந்த இணைப்பு விழாவில் அதிகம் கலந்து கொண்டனர். 

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வேதனை

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராமச்சந்திரன் பேசுகையில், சில கதாசிரியர்களின் புரட்டுக்களை கேட்டு, வேறு வழியில்லாமல் எங்கள் காலத்தை வீணடித்து தந்தையிடம் சரணடைந்து உள்ளோம். பெரியாரை குறித்து தொடர்ச்சியாக சிலர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெரியாரை சிதைக்க வேண்டும் என்று நினைப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். யாராக இருந்தாலும் எதிர்ப்போம் என தெரிவித்தார். 

நாம் தமிழர் கட்சியில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான பார்வீன் பேசுகையில், ஒரு இயக்கத்திற்கு கொள்கையும், அதிகாரமும் முக்கியமானது. இரண்டாவது காரியம் நடக்காது என்று தெரிந்தும், தமிழர் நலன் என்று கொள்கைக்காக சுயநலம் இன்றி தன்நலம் பாராது உழைத்தோம். வயது, சுயமரியாதை, தன்மானத்தை இழந்து ஒரு இயக்கத்தில் பயணித்தோம். ஒரு சில வருடங்களாக நாம் பயணித்த திசை தடுமாறி இந்துத்துவத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. தரமற்ற தகுதியற்ற தலைமையிடம் சொல்லும் போது, அங்கு நமது சுயமரியாதை கெடுகிறது. திமுகவின் கைக்கூலி என்று வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார்கள். சி.பா. ஆதித்தனார் உள்ளோட்டோர் தனக்கு சரியான இடமாக கணித்து திராவிட இயக்கத்தில் கரைத்துக் கொண்டனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக ரத்தம் கொடுத்து இயக்கம் வளர்த்து உள்ளோம். நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். உயிரை கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாற்றுவோம்.