தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  3 Women Arrested In Usilampatti For Jewellery Theft

Usilampatti Theft: ஜோதிடம் பார்ப்பதாக கூறி ரூ.8 லட்சம் பணம், நகை அபேஸ்..சிக்கிய மூன்று பெண்கள்!

Karthikeyan S HT Tamil
Nov 21, 2023 02:45 PM IST

உசிலம்பட்டியில் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்து ரூ. 8 லட்சம் பணம், 10 சவரன் நகையை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தங்க நகை (கோப்புபடம்)
தங்க நகை (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பங்களா மேட்டு தெருவில் போதுராஜ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மாதம் சிறுமி மட்டும் தனியாக இருந்தபோது நான்கு பெண்கள் ஜோதிடம் பார்ப்பவர்கள் போல் பாவனை செய்து சிறுமியின் கவனத்தை திசை திருப்பி விட்டு வீட்டில் இருந்து 8 லட்சம் ரூபாய் பணம், 10 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக போதுராஜ் உசிலம்பட்டி நகர காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பெண்களை தேடிவந்தனர். இதனிடையே, தேடப்பட்டு வந்த பெண்கள் நான்கு பேரும் வேறு ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து கடலூர் விரைந்த போலீசார், சிறையில் இருந்த நான்கு பேரில் ஈரோட்டை சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி ஆகிய மூன்று பெண்களை பிணையில் எடுத்து, உசிலம்பட்டி திருட்டு வழக்கில் கைது செய்து மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான மூன்று பெண்களுக்கும் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்