Perambalur Accident : பகீர்! உயிரை காப்பாற்ற வந்து உயிரைவிட்ட பரிதாபம் - ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி மூவர் பலி!
பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 5 பேரும் வேறு ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்