தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  2nd Day Of Protest In Sekkipatti Demanding Ban On Granite Quarry Auction

Madurai : கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு - சேக்கிபட்டியில் 2ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்!

Divya Sekar HT Tamil
Oct 27, 2023 12:15 PM IST

சேக்கிப்பட்டி 2 ஆவது நாள் போராட்டமான இன்று மந்தையம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்தனர்.

சேக்கிபட்டியில் 2ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
சேக்கிபட்டியில் 2ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என சேக்கிபட்டி ஊர் மந்தையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாறைகளை பாதுகாகக்க தொடரும் இப்போராட்டத்தில் பெண்கள் களத்திலேயே படுத்துறங்கினர். நல்ல முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர சேக்கிப்பட்டி பெண்கள் உறுதியேற்று உள்ளனர். மேலும் கிரானைட் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களிடம் மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, மதுரை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கிரானைட் குவாரி அழுமதி அளிக்க கூடாது என ஏற்கனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு அரசுக்கு அனுப்பி உள்ளதாக வட்டாட்சியர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதனை ஏற்காமல் தற்போதே அதற்கான தீர்வு தேவை என கூறி மீண்டும் பொது மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கும்மிப்பாட்டுகளை பாடிக்கொண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆவது நாள் போராட்டமான இன்று மந்தையம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர்.

விரைவில் கிரானைட் குவாரி டெண்டர் ரத்து செய்யப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டுவது, ரேசன் அட்டை திருப்பி ஒப்படைத்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்