2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!

2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!

Kathiravan V HT Tamil
Dec 23, 2024 02:48 PM IST

களத்தில் நின்று போரடுகிறோம். குறைந்த பட்சம் விசிக இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 25 இடங்களாவது கேட்டு பெற வேண்டும் என வன்னி அரசு பேட்டி!

2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!
2026 தேர்தல்! வேலையை காட்டினார் வன்னி அரசு! திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டு அடம்!

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை போல் கட்சியில் உள்ள அடிநிலை தொண்டர்கள் விசிக தொடங்கும் போது எங்கள் தலைவர்கள் அவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி ஆக வேண்டும் என வர வேண்டாம். வாக்கு அரிசி போட்டு இயக்கத்திற்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்தார். ஆனால் நாங்கள் தேர்தல் பாதைக்கு வந்த பிறகு களத்தில் நின்று போரடுகிறோம். 

குறைந்த பட்சம் விசிக இரட்டை இலக்கத்தில் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 25 இடங்களாவது கேட்டு பெற வேண்டும் என்பது விசிக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் என்னுடைய மனநிலை ஆகும். ஆனால் எவ்வளவு இடங்கள் கேட்க வேண்டும் என்பதை திருமாவளவன் முடிவு செய்வார். ஆனால் எங்கள் விருப்பத்தை கட்டாயம் சொல்வோம் என தெரிவித்து உள்ளார். 

தேர்தலுக்கு 15 மாதம் உள்ளது! - எம்.ஆர்.கே

வன்னி அரசுவின் இந்த கருத்துக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதில் அளித்து உள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தேர்தலுக்கு 15 மாதம் உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மதித்து வருகிறார். எதிர்கட்சியாக இருக்கும் போது அமைந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் அதிமுக ஆட்சியை கைப்பற்றிய உடன் கூட்டணி கட்சிகளை முறித்துக் கொள்வது வழக்கம். ஆனால் திமுக தலைவர் அப்படி இல்லை” என கூறி உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.