10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’முதலிடத்தில் சிவகங்கை! கடைசி இடத்தில் வேலூர்’ மாவட்ட வாரியாக தேர்ச்சி முடிவுகள்!
முதலிடத்தில் சிவகங்கை, இரண்டாம் இடத்தில் விருதுநகர், மூன்றாம் இடத்தில் தூத்துக்குடி, நான்காம் இடத்தில் கன்னியாகுமரி, ஐந்தாம் இடத்தில் திருச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’முதலிடத்தில் சிவகங்கை! கடைசி இடத்தில் வேலூர்’ மாவட்ட வாரியாக தேர்ச்சி முடிவுகள்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 4,35,119 மாணவியரும், 4,36,120 மாணவர்களும் அடங்குவர். இதில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். இது கடந்த ஆண்டு (மார்ச் / ஏப்ரல் 2024) தேர்ச்சி விகிதமான 91.55% உடன் ஒப்பிடும்போது 2.25% அதிகமாகும்.
பாலின வாரியான தேர்ச்சி விகிதத்தில், மாணவர்களை விட மாணவியரே சிறந்து விளங்குகின்றனர். இந்த ஆண்டு மாணவியரின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74% ஆகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவியர் 4.14% அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மொத்தம் 15,652 மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.