Mylapore Temple Dance: ’மயிலாப்பூரு மயிலே மயிலே டான்ஸ் சர்ச்சை!’ மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்! நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mylapore Temple Dance: ’மயிலாப்பூரு மயிலே மயிலே டான்ஸ் சர்ச்சை!’ மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்! நடந்தது என்ன?

Mylapore Temple Dance: ’மயிலாப்பூரு மயிலே மயிலே டான்ஸ் சர்ச்சை!’ மன்னிப்பு கேட்ட இளைஞர்கள்! நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Feb 05, 2024 08:02 AM IST

”Mylapore Kapaleeswarar temple: விக்னேஷ் பாலன் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் ‘மயிலாப்பூரு மயிலே மயிலே’ என்ற குத்துப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது”

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டனர்

விக்னேஷ் பாலன் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் ‘மயிலாப்பூரு மயிலே மயிலே’ என்ற குத்துப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ  சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது. 

கோயில் வளாகத்தில் இது போன்ற நடமனம் ஆடிய இளைஞர்களுக்கு கடும் கண்டனம் எழுந்தது.  இதனை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள், விக்னேஷ் பாலன் மற்றும் ஹரிதாஸ் ஆகியோர் மன்னிப்புக்கேட்டு வீடியோ வெளியீட்டுள்ளனர். அதில், “போன டிசம்பர் மாசம் மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் டான்ஸ் வீடியோ எடுத்து போட்டு இருந்தோம். ஆனால் கடந்த கொஞ்சம் நாளாக அதில் கமண்ட்ஸ் வரத் தொடங்கி இருந்துச்சி, அதனால் அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டேன். அதன் பிறகு ட்விட்டரில் வேற மாதிரி ப்ரோஜக்‌ஷனில் அந்த வீடியோவை பார்த்தோம். இதுபோன்ற வீடியோக்களை இனி இதை செய்யமாட்டோம்.

கோயிலில் இந்த மாதிரி பாடலுக்கு இனி ஆடமாட்டோம். இத தவறை ஏற்றுக் கொள்கிறோம். அறநிலையத்துறைக்கு ரொம்ப பெரிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த வீடியோ யாருக்காவது மன வருத்தம் ஏற்படுத்தி இருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.