Loksabha Election 2024: ’இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - முத்தரசன் இடையே கையெழுத்தானது!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: ’இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - முத்தரசன் இடையே கையெழுத்தானது!

Loksabha Election 2024: ’இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்!’ ஸ்டாலின் - முத்தரசன் இடையே கையெழுத்தானது!

Kathiravan V HT Tamil
Feb 29, 2024 05:32 PM IST

’எந்த தொகுதி என பெயர் அறிவிக்கப்படாத நிலையில் 2 தொகுதிகள் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது’

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு
திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வருகிறது.

இதில் ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் 2 நாடாளுமன்றத் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒப்பந்தத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எத்தனை தொகுதி என்பதை காட்டிலும் நாடு முக்கியம் என்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். 

இன்றைக்கு எண்ணிக்கைகள் மட்டும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எந்த இடம் என்பது பின்னர் முடிவு செய்யப்படும்.  இந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் அவர்களும், நானும் கையெழுத்திட்டுள்ளோம். 

சென்ற முறை 2 தொகுதிகளில் வென்றோம், நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு ஆகி உள்ளோம். கூட்டணிக்குள் ஒரு சிக்கலும் இல்லை, நீங்கள் யாரும் எந்த சிக்கலும் ஏற்படுத்த முடியாது. 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.