2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்

2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்

Marimuthu M HT Tamil Published May 21, 2024 09:37 PM IST
Marimuthu M HT Tamil
Published May 21, 2024 09:37 PM IST

2 Bogus Doctors Arrested:திண்டுக்கல் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்
2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகம் இருப்பதாகவும், இவர்கள் முறையாக மருத்துவப் படிப்புகள் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் செய்து வருவதாகவும் தவறான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் துறைக்குப் புகார் சென்றுள்ளது. இந்நிலையில் அதனை ஆய்வு செய்ய திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் பூமிநாதன் உத்தரவின்பேரில், மருத்துவக்குழுவினர், சாணார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். 

 இதில் சாணார்பட்டி அருகே கோணப்பட்டி சாலையில் துரைப்பாண்டி (67) என்பவர் அலோபதி மருத்துவம் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது ஆய்வில் தெரியவந்தது. இதே போல், இப்பகுதியில் படிக்காமல் மருத்துவம் பார்த்த மலைச்சாமியை (60), கையும் களவுமாகப் பிடித்த இணை இயக்குநர் பூமிநாதன் அவரையும் துரைப்பாண்டியையும் அழைத்துக்கொண்டு சென்று, சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

இவர்கள் இருவரைப் பற்றியும் சாணார்பட்டிகாவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே போலி மருத்துவர்களை, காவல் துறையினர் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களிடம் சிகிச்சைப் பெற்று வந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கடந்தாண்டு நடந்த போலி மருத்துவர் களையெடுப்பு:

அதேபோல், கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை களையெடுக்கும் சோதனையில் 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறையினர், மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 01.04.2023 முதல் நடத்திய அதிரடி சோதனையில், முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 28 போலிமருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில் 3 பேரும், அரியலூரில் 4 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், திருவாரூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

யார் இந்த போலி டாக்டர்கள்:

முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். அதேபோல் `பாராமெடிக்கல்' என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போலி மருத்துவம் ஆகும்.

இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், ஆங்கில சிகிச்சை அளிப்பதும்கூட போலி மருத்துவம்தான். இவர்களுக்கு ஆங்கில முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, ஆங்கில மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், ஆங்கில மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது.

இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இதே போல் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. ஆங்கில மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட, தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகம் உள்ளது வருந்தத்தக்க காரியம். இது விலை மதிப்பற்ற மனித உயிரிகளுடன் விபரீதத்தில் போய் சேர்த்துவிடும்.

இதனால் தான் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், போலி மருத்துவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.