Tamil News  /  Tamilnadu  /  19-year-old Youth Arrested For Murder Of 7-years-old Boy Due To Homosexuality

Crime: ஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு .. காவல் நிலையம் அருகேயே 7 வயது சிறுவனை குத்திக்கொலை செய்த காமகொடூரன்!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 07:44 AM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் 7 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் ஒருவரை போலீசார் கைது செய்தனா். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்ட தாமஸ், சூரங்குடி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
கைது செய்யப்பட்ட தாமஸ், சூரங்குடி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.

ட்ரெண்டிங் செய்திகள்

முத்துக்குமார் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற நிலையில் அவரது மனைவி சாந்தியும் வேலைக்கு சென்றிருந்தாா். இந்தநிலையில், அஸ்வின் குமார் புதன்கிழமை (டிச.10) அவரது வீட்டிற்கு எதிரே உள்ளே வேம்பார் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் விழுந்து கிடப்பதை கண்ட அப்பகுதியினா், அவனை தூக்கினா். அப்போது கழுத்து, கை, வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து சூரங்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற சூரங்குடி போலீசாா் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். தொடர்ந்து கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளி யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், வேம்பார் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (19) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சந்தேகத்தின்பேரில் ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தாமஸ், குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த சிறுவனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகின. 

அதாவது, சம்பவத்தன்று காலை தாமஸ் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவாங்கி அருந்தியுள்ளாா். மதுபோதை உச்சம் அடைந்தபோது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக தெரிகிறது.  அப்போது, கடலோர காவல் நிலையம் வழியாக செல்லும்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாக கூறப்படுகிறது. ஆனால், அவன் மறுத்து சத்தம் போட்டுள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் மறைத்து வைத்து இருந்த இரண்டு சிறிய ரக கத்தியால் சிறுவனின் கழுத்து, வயிறு, கைப்பகுதியில் கொடூரமாக குத்தியதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். இதில் துடிதுடித்த சிறுவன் உயிரை காப்பாற்ற காவல்நிலையம் நோக்கி ஓடிய நிலையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாா்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 7 வயது சிறுவனை 19 வயது இளைஞர் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச்சேர்க்கை தொல்லையால் சென்னை அமைந்தகரையில் நண்பரை கொன்ற இளைஞா் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்