’15 லட்சம் பேர் வந்தாங்க! ஒத்த ரூபா தரல! இதுதான் முதல் வெற்றி மாநாடு!’ பொங்கி எழுந்த புஸ்ஸி ஆனந்த்!
இந்த மாநாடு மிக சிறப்பான மாநாடக இருந்தது. தளபதி அழைக்கிறார் என்று சொல்லி, ஒரு அழைப்பிதழ் கூட அடிக்கவில்லை. மாநாடு குறித்து தோழர்களுக்கும், பொதுமக்களும் விஜய் சொன்னார். அதற்கு 15 லட்சம் பேர் கூடினார்கள். 15 லட்சம் பேர் கூடுவதற்கு ஒரு ஒத்த ரூபாயை கூட நாங்கள் செலவு செய்யவில்லை.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாட்டில் பங்கேற்க வந்த மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை, ஆனால் 15 லட்சம் பேர் வந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் நிலம் தந்தார்கள்
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், விக்கிரவாண்டியில் மாநாட்டுக்கு 27 ஏக்கர் நிலம் பத்தாது என்று சொன்ன போது, விவசாயிகளும், இந்த ஊர் மக்களும் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ’தளபதிக்காகதானே’ என்று சொல்லி விவசாயிகள் நிலம் தந்தார்கள். தமிழக மக்களுக்கு எப்போதும் தளபதி அவர்கள் நன்றி உள்ளவராக இருப்பார். அந்த நல்ல எண்ணத்தில் வரக்கூடிய தலைவர்தான் எங்கள் தளபதி.
ஒத்த ரூபாயை கூட செலவு செய்யவில்லை
இந்த மாநாடு மிக சிறப்பான மாநாடக இருந்தது. தளபதி அழைக்கிறார் என்று சொல்லி, ஒரு அழைப்பிதழ் கூட அடிக்கவில்லை. மாநாடு குறித்து தோழர்களுக்கும், பொதுமக்களும் விஜய் சொன்னார். அதற்கு 15 லட்சம் பேர் கூடினார்கள். 15 லட்சம் பேர் கூடுவதற்கு ஒரு ஒத்த ரூபாயை கூட நாங்கள் செலவு செய்யவில்லை.
ஒருமாதம் விழுப்புரத்தில் நான் தங்கி இருந்தேன். எனக்கு சாப்பாடு கொண்டு வந்த அரவிந்த் என்ற தம்பி எனக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு கொண்டு வந்தார். ஆனால் இது வரை அதற்கு பெட்ரோலுக்கு பணம் கேட்கவில்லை. தமிழ்நாட்டிலேயே முதல் வெற்றி மாநாடு இதுதான் என தெரிவித்தார்.
டாபிக்ஸ்