Tamil News  /  Tamilnadu  /  1.5 Crores Of Eggs Are Exported From Namakkal To Qatar For Football World Cup
முட்டை
முட்டை

FIFA World Cup 2022: நாமக்கல்லில் இருந்து 1.50 கோடி முட்டை கத்தாருக்கு ஏற்றுமதி!

21 November 2022, 14:50 ISTKarthikeyan S
21 November 2022, 14:50 IST

நாமக்கல்: கத்தாரில் நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவுக்கு மாதம்தோறும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. இந்தச் சூழலில், கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்று (நவ.20) தொடங்கி இருக்கிறது. இதனால், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்திருக்கிறார்கள். 

வெளிநாட்டு ரசிகர்களுக்கு தங்கும் விடுதிகள், மிதக்கும் ஹோட்டல்கள், பாலைவனத்தில் பிரத்யேக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கத்தாரில் குவிந்துள்ளதால் அங்கு உணவுப் பொருட்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்குவதற்காக முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளரும், நாமக்கல் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் பி.வி.செந்தில் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்