தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  14 Ips Officers Got Promotion The Following Transfers And Postings Are Ordered With Immediate Effect

IPS Promotion: 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

Manigandan K T HT Tamil
Mar 30, 2023 08:11 PM IST

Tamilnadu Government: கொளத்தூர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எஸ்.சக்திவேல் காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்பு படம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் XV பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறுகிறார்.

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி வி.பொன்ராமு, சென்னை ரயில்வே எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியான பி.ரவிசேகரன், சென்னை ஐ.ஜி. தலைமையகத்தில் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்.

திருச்சி ஏ.எஸ்.பி.யான வி.எம்.பி. ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி.யான பி. முத்துக்கருப்பன், பழனி XIV பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி.யான பி.ஜானகிராம், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியான எஸ். சந்திரமெளலி, பழனி தமிழ்நாடு போலீஸ் XIV பட்டாலியன் ஏ.எஸ்.பியான டி.மங்கலேஸ்வரன், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி.யான டி.குணசேகரன், தர்மபுரி மாவட்ட ஏ.எஸ்.பி.யான பி.அண்ணாமலை, திருநெல்வேலி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி.யான எஸ்.மாரிராஜன், நீலகரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி.யான ஏ.மோகன் நவாஸ், திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்.பி.யான வி. சுப்பராஜ், ஆவடி சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையர் எச்.கங்கைராஜ் ஆகியோர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மதுரை காவல் துணை ஆணையர் கெளதம் கோயல், சேலம் காவல் துறை துணை ஆணையராகவும், வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-XV பட்டாலியன் எஸ்.பி.யான எம்.சந்திரசேகரன், , சென்னை கடலோர அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிரைம் பிராஞ்ச்-II துணை ஆணையர் கே.மீனா, கிரேட்டர் சென்னை காவல் துறை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச்-II துணை ஆணையராகவே தக்கவைக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுண்ணறிவு பிரிவு-II காவல் துறை துணை ஆணையர் எஸ்.சக்திவேல், கொளத்தூர் காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாகத் துறை துணை காவல் ஆணையரான எம்.ராமமூர்த்தி, சென்னை நுண்ணறிவு பிரிவு-II காவல் துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பழனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் XIV பட்டாலியன் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அய்யாசாமி, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ், XIII பட்டாலியன் படைத்தலைவராக (Commandant) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு, பணியிடமாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எஸ்.சக்திவேல் காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்