மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்.. பாஜக காலூன்ற முடியாத மாநிலம் தமிழ்நாடு - செல்வப்பெருந்தகை!
மதரீதியாக பிளவுபடுத்துகிற மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாற்பதும் நமதே என்று கூறியபடி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைத்திருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் முடிவின் மூலம் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப் போல, அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட இருந்த பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய ஜனநாயக வரலாற்றில் 18-வது மக்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெற்ற தேர்தலாகும். இத்தேர்தல் முடிவின் மூலம், சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டு, ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த ஜனநாயக விரோதச் செயல்களை இனி நிகழ்த்த முடியாது.
மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்
இந்த தேர்தல் முடிவின் மூலம் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப் போல, அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட இருந்த பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை வெற்றியாக காங்கிரஸ் கட்சி கருதி, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 303 இடங்களை விட தற்போது 63 இடங்கள் குறைவாக பெற்றதனால் மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலையில் பா.ஜ.க. இருக்கிறது. மதரீதியாக பிளவுபடுத்துகிற மோடி அரசியலுக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்.