TN IPS Transfer: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பெருமாள், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் டி.சி.ஆக இருந்த சக்திவேல், சென்னை குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய உளவு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜன், கொளத்தூர் துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன், தென்சென்னை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் ஆகியுள்ளார்.
அதேபோல், வடசென்னை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இருந்த ஷியாமளா தேவி, மத்திய உளவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்சென்னை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இருந்த சரவணகுமார், வடசென்னை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாநகரப் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், திருப்பூர் மாநகர் வடக்கின் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த ஜி.எஸ். அனிதா, நெல்லை மாநகர தலைமையக துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்