10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!
”தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே”

இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்தும், தேர்சி பெறாத மாணவர்களுக்கு அறிவுரையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 4,35,119 மாணவியரும், 4,36,120 மாணவர்களும் அடங்குவர். இதில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். இது கடந்த ஆண்டு (மார்ச் / ஏப்ரல் 2024) தேர்ச்சி விகிதமான 91.55% உடன் ஒப்பிடும்போது 2.25% அதிகமாகும். பாலின வாரியான தேர்ச்சி விகிதத்தில், மாணவர்களை விட மாணவியரே சிறந்து விளங்குகின்றனர். இந்த ஆண்டு மாணவியரின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74% ஆகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவியர் 4.14% அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மொத்தம் 15,652 மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
