Relief: 'மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 100%நிவாரண உதவிகள்' - முதலமைச்சர் வலியுறுத்தியதை பகிர்ந்த அமைச்சர் உதயநிதி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Relief: 'மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 100%நிவாரண உதவிகள்' - முதலமைச்சர் வலியுறுத்தியதை பகிர்ந்த அமைச்சர் உதயநிதி

Relief: 'மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 100%நிவாரண உதவிகள்' - முதலமைச்சர் வலியுறுத்தியதை பகிர்ந்த அமைச்சர் உதயநிதி

Marimuthu M HT Tamil Published Dec 29, 2023 02:09 PM IST
Marimuthu M HT Tamil
Published Dec 29, 2023 02:09 PM IST

மழை வெள்ளம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மழை வெள்ளம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மழை வெள்ளம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘’அதிகனமழையாலும் - வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் - தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதலமைச்சர் அவர்கள், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள்'' எனத் தெரிவித்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.