Tamil News  /  Tamilnadu  /  10 People Arrested Nia Raids In Tamil Nadu
கோப்புப்படம்
கோப்புப்படம்

NIA raids: என்ஐஏ சோதனை - தமிழகத்தில் 10 பேர் கைது

22 September 2022, 13:51 ISTKarthikeyan S
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 13:51 IST

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை: தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ட்ரெண்டிங் செய்திகள்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பாப்புலர் ப்ரண்ட ஆப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி பல்வேறு பயிற்சிகளை அளித்து வருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் தமிழகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, விருதுநகா், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மண்டல செயலாளர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த யாசர் அரபாத் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு பின் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி பையாஸ் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கடலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ளார். என்ஐஏ நடத்தி வரும் சோதனையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

  • Share on Twitter
  • Share on FaceBook