Tamil News  /  Sports  /  Yuvraj Singh Met Rishabh Pant In Person And Encouraged Him
விபத்தில் சிக்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உடன் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்
விபத்தில் சிக்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உடன் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்

Rishabh Pant: ‘பய ரெடியா இருக்கான்..’ ரிஷப் பந்தை உற்சாகப்படுத்திய யுவராஜ் சிங்!

17 March 2023, 8:14 ISTStalin Navaneethakrishnan
17 March 2023, 8:14 IST

Yuvraj Singh: தன்னுடைய அனுபவத்தையும், முயற்சியையும் ரிஷப்பிடம் கூறி, அவரை உற்சாகப்படுத்தவே யுவராஜ் சிங் வந்ததாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர் ரிஷப் பந்த். சமீபத்தில் அவரது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்கு உள்ளானது.

ட்ரெண்டிங் செய்திகள்

படுகாயம் அடைந்த ரிஷப் பந்த், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். இருப்பினும் அவரது கால்கள் கடும் சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட ஓராண்டுகள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரிஷப் பந்த். இது ஒருபுறமிருக்க, அவர் தன்னை மீட்டுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளார். சிறு சிறு உடற்பயிற்சிகள், நீச்சல் போன்ற பயிற்சிகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பந்த் வீட்டுக்கு வந்து அவரை நேரில் சந்தித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங், மீண்டும் கிரிக்கெட் ஆடினார்.

தன்னுடைய அனுபவத்தையும், முயற்சியையும் ரிஷப்பிடம் கூறி, அவரை உற்சாகப்படுத்தவே யுவராஜ் சிங் வந்ததாக தெரிகிறது. யுவராஜ் சிங்கின் இந்த வருகையால் ரிஷப் பந்த், தன்னம்பிக்கை பெற்றார்.

இளம் வீரராக இந்திய அணியின் நன்மதிப்பை பெற்ற ரிஷப் பந்த், மீண்டும் அணிக்கு திரும்ப, யுவராஜ் சிங்கின் வருகை அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கும்.

தன்னுடைய இந்த வருகைக்குப் பின், யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

‘குழந்தை ஒரு அடி எடுத்து வைத்துள்ளது, இந்த சாம்பியன் மீண்டும் திரும்ப வருகிறார். நன்றாக பிடிக்கவும், சிரிக்கவும். என்ன ஒரு பையன் எப்போதும் நேர்மறை மற்றும் வேடிக்கையானவன் !! உனக்கு நிறைய சக்தி இருக்கிறது’

என்று அந்த பதிவில் கூறியுள்ளார் யுவராஜ் சிங்!

டாபிக்ஸ்