தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl: Sophie Devine 99 From 36 Balls Helps Rcb To Beat Gujarat Giants By 8 Wickets

WPL: 36 பந்தில் 99 ரன்கள்!சோஃபி டெவின் அசுர ஆட்டத்தால் வெற்றி வாகை சூடிய ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 18, 2023 10:54 PM IST

WPL 2023: நூலிழையில் சாதனையை நழுவவிட்டபோதிலும், அசுரத்தனமான ஆட்டத்தால் சோஃபி டெவின் ஆர்சிபி அணிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தார். தனது இன்னிங்ஸில் 9 பவுண்டர், 8 சிக்ஸர்கள் என வானவேடிக்கை நிகழ்த்தினார்.

பந்தை சிக்ஸருக்கு அடித்த சோஃபி டெவின்
பந்தை சிக்ஸருக்கு அடித்த சோஃபி டெவின் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து 189 ரன்கள் மிக பெரிய சேஸை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க பேட்டர் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் இருந்தே ரன் வேட்டையில் ஈடுபட தொடங்கிய ஆர்சிபி ஓபனர்கள் ஸ்மிருத்தி மந்தனா - சோஃபி டெவின், குஜராத் பெளலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மந்தனா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரைசதத்தை பூர்த்தி செய்த சோஃபி டெவின் தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்தார்.

36 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த அவர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து துர்தஷ்டவசமாக அவுட்டானார். இதனால் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் சதத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவறிவிட்டார்.

இருப்பினும் இவரது அதிரடியால் 15.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம் என்று நம்பியிருந்த குஜராத் அணியின் கனவை கலைத்ததுள்ளது ஆர்சிபி அணி.

அத்துடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த குஜராத், இந்த மோசமான தோல்வியால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

WhatsApp channel

டாபிக்ஸ்