Tamil News  /  Sports  /  Wpl 2023: Will Up Warriorz Stops Miw Unbeaten Knock Today
யுபி வாரியர்ஸ் அணியினர்
யுபி வாரியர்ஸ் அணியினர்

WPL 2023: மும்பை தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா யுபி வாரியர்ஸ்?

18 March 2023, 10:33 ISTMuthu Vinayagam Kosalairaman
18 March 2023, 10:33 IST

விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தொர்ந்து நீடித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி அதன் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகளுக்க இடையிலான போட்டி டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு கடந்த முறை மோதலில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போதைய நிலவரப்படி விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நாளில் இருந்து முதல் இடத்திலேயே நீடித்து வருகிறது மும்பை அணி.

அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் குஜராத் அணியும் 2 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

குஜராத் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

அதேபோல் நல்ல ரேட்டுடன் யுபி வாரியர்ஸ் 3வது இடத்தில் இருந்தாலும், இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் குறைந்தது 2 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும்.

அப்போதுதான் எலிமினேட்டர் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

மகளிர் ஐபிஎல் தொடர் விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதி இறுதிக்கு தகுதி பெறும்.

இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியை பெற்று மும்பை அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 4  வெற்றிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. 

மகளிர் ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியை தழுவாத அணியாக மும்பை அணி இருந்து வருகிறது. அநத அணியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் சிறப்பாக வழிநடத்துவதுடன், பேட்டிங்கிலும் உச்சகட்ட பார்மில் உள்ளார்.  பெளலிங்கை பொறுத்தவரை சைகா இஷாக் எதிரணி பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார். 

அத்துடன் ஒரு அணியாகவும் மும்பை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் தொடர் வெற்றிக்கு யுபி வாரியர்ஸ் முட்டுக்கட்டை போடுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

டாபிக்ஸ்