தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023: League Stage Concludes, Dc Qualifies For Final; Upw, Mi To Fight For Spot In Summit Clash

WPL 2023: கடைசி போட்டியில் டுவிஸ்ட்! யுபியை வீழ்த்தி டெல்லி இறுதிக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 22, 2023 12:23 AM IST

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணி ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியதுடன், இறுதிப்போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றது.

இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீராங்கனைகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறார்கள்
இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி வீராங்கனைகள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கிறார்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் டெல்லி அணி இந்தப் போட்டியில் நல்ல ரன் ரேட் விகிதத்தில் ஜெயித்தால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும் சூழல் இருந்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த யுபி வாரியர்ஸ், டெல்லி பெளலர்களின் கட்டுப்பாடான பெளலிங்கால் ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் தடுமாறினர்.

20 ஓவர் முடிவில் 138 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்த இலக்கை டெல்லி அணி விரட்டியது. இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு இருந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்கு அசத்தலான தொடக்கத்தை கேப்டன் மெக் லேனிங், ஷெபாலி வார்மா ஆகியோர் தந்தனர்.

ஷெபாலி வர்மா 21 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஜேமிமா ரோட்ரிக்ஸும் 3 ரன்னில் ஏமாற்றினார்.

இதைத்தொடர்ந்து லேனிங் - மரிசான் கேப் ஆகியோர் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். மெக் லேனிங் 39 ரன்னில் ஆட்டமிழந்தாரர்.

இவரை தொடர்ந்து வந்த ஆலிஸ் கேப்ஸி தன் பங்குக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார். 34 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ஸி அவுட்டானபோதிலும், மறுமுனையில் நிலைத்து நின்று பேட் செய்து வந்த கேப் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

17.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்த மும்பை பின்னுக்கு தள்ளி முன்னேறியது.

கடைசி போட்டியில் நிகழ்ந்த இந்த டுவிஸ்டால் டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து 5 வெற்றிகளை குவித்து பின்னர் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து, கடைசி போட்டியில் பெற்ற வெற்றியுடன் 6 வெற்றிகளை குவித்த மும்பை அணி எதிர்பாராத விதமாக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனால் மார்ச் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்