தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023 Hemalatha Smacks Her Maiden Wpl2023 Fifty Off Just 30 Balls

WPL 2023: 30 பந்தில் தமிழக வீராங்கனை அரை சதம்!-இலக்கை விரட்டுமா யு.பி வாரியர்ஸ்

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 05:28 PM IST

GG vs UPW: குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை ஹேமலதா அரை சதம் விளாசினார். கார்ட்னரும் 60 ரன்கள் விளாசி அசத்தினார்.

குஜராத் வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா
குஜராத் வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா (@GujaratGiants)

ட்ரெண்டிங் செய்திகள்

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை ஹேமலதா அரை சதம் விளாசினார். கார்ட்னரும் 60 ரன்கள் விளாசி அசத்தினார்.

30 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினால் ஹேமலதா. அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசி இருந்தபோது ஆட்டமிழந்தார்.

மகளிர் ப்ரீமியர் லீக்கில் இதுதான் அவரது முதல் அரை சதம் ஆகும். கார்ட்னர் 39 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

யு.பி.வாரியர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

முன்னதாக, முதலில் விளையாடி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் வீராங்கனைகள் தொடக்கத்தில் சற்று தடுமாறினர்.

தொடக்க வீராங்கனை டங்லி 23 ரன்களிலும், வோல்வார்ட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஹர்லீன் தியோலும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போதுதான் ஆபத்பாந்தவனாக களத்தில் இறங்கினார் தயாளன் ஹேமலதா.

சென்னையைச் சேர்ந்தவரான இவருக்கு, இந்த முறை குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் கிடைத்தது.

இதுவரையிலான ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத ஹேமலதா இன்றைய ஆட்டத்தில் பொளுந்து கட்டினார்.

மொத்தம் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் கார்ட்னரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார்.

இருவரும் அணியின் ஸ்கோரை மூன்று இலக்கத்துக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர், இருவருமே ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு குஜராத் எடுத்தது.

யு.பி. தரப்பில் பார்ஷவி சோப்ரா, கெயக்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஞ்சலி சர்வானி, எக்லெஸ்டோன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

குஜராத் அணி 7 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், யு.பி.வாரியர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுடன் தோல்வியை சந்தித்துள்ளது குஜராத்.

WhatsApp channel

டாபிக்ஸ்