தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023: Final League Matches Today In Wpl

WPL 2023: WPL-ல் இன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள்

Manigandan K T HT Tamil
Mar 21, 2023 09:52 AM IST

Women Premier League: இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகிறது.

மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத், பெங்களூர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா
மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத், பெங்களூர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று நடைபெற்ற 2 ஆட்டங்களில் ஒன்றில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் யு.பி.வாரியர்ஸ் அணியும், மற்றொரு ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் வீழ்த்தியது.

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகிறது.

மற்றொரு ஆட்டத்தில் யு.பி. வாரியர்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடுகிறது.

இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது.

யு.பி வாரியர்ஸுடன் ஏற்கனே டெல்லி விளையாடிய ஆட்டத்தில் டெல்லி ஜெயித்தது.

அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க யு.பி. முயற்சி செய்யும்.

அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஏற்கனவே தோல்வியைத் தழுவிய பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் தேட முயற்சி செய்யும்.

வரும் 24ம் தேதி எலிமினேட்டர் சுற்றும், 26ஆம் தேதி பைனலும் நடைபெறவுள்ளது.

இன்றுடன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் முடிகிறது. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். இதனால், இந்த ஆட்டத்தின் முடிவுகள் டெல்லி, மும்பை அணிகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ். நேற்று பரபரப்பாக நடந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 109 ரன்களில் சுருண்டது. 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

9 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது டெல்லி.

முதலில் களமிறங்கிய மெக் லான்னிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.

ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 33 ரன்கள் எடுத்தபோது ஹேலே மாத்யூஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அலைன் கேப்சி 38 ரன்கள் விளாசினார். இவ்வாறாக அந்த அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்