தமிழ் செய்திகள்  /  Sports  /  Wpl 2023: Amelia All-round Show Powers Mumbai Indians To Four Wicket Win Over Royal Challengers Bangalore

WPL 2023: தோல்வியுடன் முதல் ஐபிஎல் பயனத்தை முடித்த ஆர்சிபி மகளிர் அணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2023 08:48 PM IST

தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையுடன் தோல்வியை தழுவியது முதல் ஐபிஎல் தொடரின் பயணத்தை முடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியினர்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியினர் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த மும்பை அணி, ஆர்சிபி அணியை 20 ஓவரில் 9 விக்கெட்டை வீழத்தி 125 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மிகவும் எளிதான இலக்கை விரட்டிய மும்பை அணி ஹேலி மேத்யூஸ் - யாஸ்திகா பாட்யா ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர்.

பவர் ப்ளே முடிவதற்குள்ளாகவே முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில், பாட்யா 30 ரன்னில் அவுட்டானார். இதன் பின்னர் மேத்யூஸ் 24 ரன்னில் அவுட்டாக, அடுத்தடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 13, ஹர்மன்ப்ரீத் கெளர் 2 ரன்களுடன் வெளியேறினார்.

இதனால் 73 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த அமெலியா கெர், பூஜா வஸ்த்ராகர் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கினர்.

வஸ்த்ராகர் 19 ரன்னில் அவுட்டானபோதிலும், நிலைத்து நின்று பேட் செய்து வந்த அமெலியா கெர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். 16.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் 129 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது.

மந்தனா, சோபி டெவின், எலிசா பெர்ரி, ரிச்சா கோஷ் என ஏராளமான நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெற்று இருந்தாலும் மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் ப்ளே ஆஃப் கூட தகுதி பெற முடியாமல் தோல்விகரமான அணியாக மாறியுள்ளது ஆர்சிபி.

முதலில் விளையாடிய 5 போட்டிகளில் தோல்வியுற்றபோதிலும், பின்னர் அடுத்தடுத்து அதிரடியாக இரண்டு போட்டிகளை வென்ற ஆர்சிபி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது.

புள்ளிப்பட்டியலில் ஆரம்பத்தில் இருந்து கடைசி இடத்தை பிடித்து வந்த ஆர்சிபி, தொடரின் முடிவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்