Vinesh Phogat Disqualified: பறிபோனது பதக்க கனவு! ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பேரிடி!
Vinesh Phogat Disqualified: 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
Vinesh Phogat Disqualified: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மல்யுத்த விளையாட்டு குடும்ப பின்னணி
இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.
மல்யுத்த விளையாட்டை இவருக்கு அறிமுகப்படுத்தியது, இவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் சிங் போகத். மல்யுத்தத்த விளையாட்டானது ஆண்களுக்கான விளையாட்டு என கருதிய காலட்டத்தில் பல்வேறு எதிர்ப்பையும் மீறி வினேஷ் போகத்தை களமிறங்கிய மகாவீர் சிங் போகத் வெற்றியும் கண்டார்.
வினேஷ் ஒன்பது வயதாக இருந்தபோது தனது தந்தையின் அகால மரணத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், வினேஷ் மல்யுத்த விளையாட்டில் சிறந்த வழிகாட்டுதல்களுடன் வெற்றி நடை கண்டார்.
முதல் சர்வதேச பதக்கம்
2014இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 48 கிலோ பிரிவில் தனது முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்றார் வினேஷ் போகத். இஸ்தான்புல்லில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வென்ற பின்னர் 2016 ரியோ ஒலிப்பிக்கில் தனது ஒலிம்பிக் விளையாட்டின் பயணத்தை தொடங்கினார்.
காலிறுதியில் முழங்கால் காயம் ஏற்பட்டதால் அவரது கனவுகள் சிதைந்தன. இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க கனவும் பறிபோனது.
இதைத்தொடர்ந்து 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களுடன் மீண்டு வந்த அவர், 2019இல் 53 கிலோ பிரிவுக்கு மாறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அவர், நூர்-சுல்தானில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தைப் பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்கு தகுதி பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் செல்லும் முன் உச்சகட்ட பார்மில் இருந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் ஓர் ஆண்டாக எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல் இருந்தார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 53 கிலோ பிரிவில் முதல் சீட் வீராங்கனையாக களமிறங்கியபோதிலும், அதிக சவால்களை எதிர்கொண்டார். அவர் ஆரம்ப போட்டிகளைத் தாண்டி முன்னேறவில்லை.
டோக்கியோ 2020 க்குப் பிறகு முழங்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட வினேஷ், 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 2022இல் பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், பிரிமிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றார்.
என்ன நடந்தது?
இன்று காலை 100 கிராம் அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று இந்திய பயிற்சியாளர் கூறி உள்ளார்.
கூகுள் ட்ரண்டிங்கில்
"மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது" என இந்திய மல்யுத்த அணி வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாபிக்ஸ்