Paris Olympics 2024: விமான ரன்வேயில் பயிற்சி! ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் நாடு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics 2024: விமான ரன்வேயில் பயிற்சி! ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் நாடு

Paris Olympics 2024: விமான ரன்வேயில் பயிற்சி! ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் நாடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 19, 2024 06:24 PM IST

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரேயொரு வீரரை மட்டும் போட்டியாளராக அனுப்பும் விமான ரன்வேயில் பயிற்சி பகுதியை சேர்ந்த நாடாக துவாலு உள்ளது. ஓட்டப்ப பயிற்சி வீரரான இந்த நாட்டை சேர்ந்த போட்டியாளர் விமான ரன்வேயில் வைத்து பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம்.

ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் துவாலு நாடு
ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் துவாலு நாடு

தென் பசிபிக் தீவு நாட்டை சேர்ந்த வீரர்

இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தென் பசிபிக் தீவு நாடாக இருந்து வரும் துவாலு நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஸ்பிரிண்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் துவாலு சார்பில் கராலோ மைபுகா என்பவர் பங்கேற்கவுள்ளார்.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொடி ஏந்தும் கெளரவத்தை பெற்ற 25 வயதாகும் இவர், இந்த முறை மீண்டும் தனது நாட்டின் சார்பில் களமிறங்குகிறார்.

துவாலுவின் மக்கள்தொகை சுமார் 11 ஆயிரம் என உள்ளது. மிகவும் தாழ்வான தீவு பகுதியாகவும், குறுகிய பவளப்பாறைகளால் ஆன இந்த பகுதி, சில நூறு மீட்டர் அகலம் கொண்டவையாகவே உள்ளது.

மிக முக்கியமாக துவாலுவில் சரியான பயிற்சி மேற்ரகொள்வதற்கு சரியான ரன்னிங் டிராக் கூட கிடையாது.

விமான ரன்வேயில் பயிற்சி

துவாலு தலைநகர் ஃபுனாஃபுட்டியில் உள்ள சில திறந்தவெளிகளில் ஒன்றாக விமான நிலையம் பகுதி உள்ளது. அங்கு பொதுமக்களுக்குகாக வாரந்தோறும் வந்து செல்லும் சில சர்வதேச விமானங்களுக்கு இடையில் ஓடுபாதை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமான ஓடுபாதையில் தான் தற்போது கராலோ மைபுகா தனது ஸ்பிரிண்டுக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம்.

துவாலு நாடு முதன் முதலில் 2008இல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அறிமுகமானது. இதுவரை தடகளம் மற்றும் பளுதூக்குதல் ஆகியவற்றில் மொத்தம் ஆறு போட்டியாளர்களை அனுப்பியுள்ளது, ஆனால் இன்னும் ஒரு பதக்கத்தை கூட வெல்லவில்லை. இருப்பினும் ஒலிம்பிக் பதக்கம் வெல்வதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர் முயற்சி

இந்த மாத தொடக்கத்தில் ஓசானியா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற சிறிய துவாலு அணியில் இடம்பிடித்த போட்டியாளர்கள் பலரும் விமானநிலையத்தில் வைத்து தான் பயிற்சி பெற்றுள்ளனர். ஓசானியா சாம்பியன்ஷிப், உலக தடகள சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப், பசிபிக் போட்டிகள் போன்றவற்றில் இந்த நாடு சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

"விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான களங்கள் எங்களிடம் இல்லை என்பது உண்மைதான். பயிற்சி பெற வேண்டியவர்கள் விமான நிலையத்தில் தான் மேற்கொள்ள வேண்டும். உயர் செயல்திறன் வசதிகள் இல்லாமல், எங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களை பதக்கம் வெல்லும் நிலைக்கு உயர்த்துவது சவாலாக உள்ளது" என்று துவாலுவின் ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

பிஜியில் படிப்பை முடித்து, பயிற்சியை பெற்று வரும் ஸ்பிண்ட் விளையாட்டில் பங்கேற்க இருக்கும் ஓட்டப்பந்தய வீரரான மைபுகா, டோக்கியோ ஓலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது முறையாக துவாலுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் தகுதி சுற்றுக்கான போட்டியில் கடைசி இடத்தை பிடித்த போதிலும், துவாலு நாட்டில் புதிய தேசிய சாதனையை உருவாக்கினார். 11.42 விநாடிகளில் இலக்கை எட்டியிருந்தார்.

இதையடுத்து எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் தனது டோக்கியோ நேரத்தை முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனையை முறியடிக்க இலக்கு

மைபுகா துவாலுவில் இருந்து சுவாவில் உள்ள தெற்கு பசிபிக் பல்கலைக்கழகத்தில் படிப்பு, பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தடகள மைதானத்தில் ஒலிம்பிக்குக்கான தனது தயாரிப்புகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

"பயிற்சி சிறப்பாக அமைந்தது. பதக்கத்தை நெருங்குவதை காட்டிலும், 80 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் சொந்த தேசிய சாதனையை முறியடிக்க விரும்புகிறேன். இதுவே எனது இலக்காக உள்ளது" என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் கராலோ மைபுகா கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.